/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர் மண்டிய குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
புதர் மண்டிய குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் - -காஞ்சிபுரம் நெடுஞ்சாலையோரத்தில், ஆதவப்பாக்கத்தில் குளம் உள்ளது. இந்த குளம், 2023 - --24ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 3 லட்சத்து 18,000 ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.
ஆனால், முறையாக பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து குளம், இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் புதர் மண்டி உள்ளது. ஊராட்சி நிர்வாகம், குளத்தை சீரமைக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.
எனவே, வடகிழக்கு பருவ மழை தீவிரமடைவதற்குள், குளத்தை சீரமைக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.