/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
↓பல துறை மேம்பாட்டு திட்டத்திற்கு உத்திரமேரூர்... தேர்வு! ↓3 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் செலவிட இலக்கு
/
↓பல துறை மேம்பாட்டு திட்டத்திற்கு உத்திரமேரூர்... தேர்வு! ↓3 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் செலவிட இலக்கு
↓பல துறை மேம்பாட்டு திட்டத்திற்கு உத்திரமேரூர்... தேர்வு! ↓3 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் செலவிட இலக்கு
↓பல துறை மேம்பாட்டு திட்டத்திற்கு உத்திரமேரூர்... தேர்வு! ↓3 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் செலவிட இலக்கு
ADDED : ஏப் 08, 2024 04:13 AM
காஞ்சிபுரம் : உத்திரமேரூர், லத்துார் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களை, 'பல துறை மேம்பாடு திட்டத்திற்கு' ஊரக வளர்ச்சி துறை தேர்வு செய்துள்ளது. மூன்று ஆண்டுகளில், 10 கோடி ரூபாய் செலவிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 274 ஊராட்சிகள் உள்ளன.
ஏழு துறைகள்
இதில், கவனம் பெறும் ஊராட்சி ஒன்றியமாக, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி நிர்வாகத்தை, ஊரக வளர்ச்சி துறை தேர்வு செய்து உள்ளது.
இந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் சுகாதாரம், சமூக நலன், கல்வி, திறன் மேம்பாடு, வேளாண், பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய ஏழு துறைகளின் கீழ், பல்வேறு திட்டங்களின் குறியீடு மிகவும் தாழ்வாக உள்ளன.
இந்த குறியீட்டை அதிகரிக்கும் விதமாக, கவனம் பெறும் வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தை' ஊரக வளர்ச்சி துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 150 ஊராட்சி ஒன்றியங்களை, ஊரக வளர்ச்சி துறை தேர்வு செய்து, தலா, 5 கோடி ரூபாய் நிதி என, மொத்தம் 750 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தி, 2023- - 24, 2024- - 25, 2026- - 27 ஆகிய மூன்று ஆண்டுகளில், பல்வேறு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் இருக்கும் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருந்தால், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, அந்தந்த துறைகளின் கீழ் வரும் திட்டங்களை, அதே துறை சார்ந்த உபரி நிதியை பயன்படுத்தி, கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதுதவிர, கவனம் பெறும் வட்டார மேம்பாட்டு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த, 5 கோடி ரூபாய் நிதியும் சேர்த்து செலவிடப்பட உள்ளது.
ஒருங்கிணைப்பு கூட்டம்
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில், லத்துார் ஊராட்சி ஒன்றியத்தை கவனம் பெரும் வட்டார மேம்பாட்டு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, உத்திரமேரூர் மற்றும் லத்துார் ஆகிய இரு ஒன்றியங்களிலும், ஏழு துறைகளின் செயல்பாடுகள் மேம்பட உள்ளது என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, சமூக நலன் உள்ளிட்ட ஏழு துறைகளில், 187 மேம்பாடு குறியீடு குறைவாக உள்ளன. இது, கவனம் பெறும் வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தில்' தேர்வு செய்து மேம்படுத்தப்பட உள்ளன.
வட்டார அளவில், ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தேர்தலுக்கு முன் நடந்தது. அதன்பின், துறை சார்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் பணிகள் தேர்வு இனி தான் நடைபெறும். அதன்பின் தான் வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

