/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் கால்வாய் அமைக்க வையாவூர் மக்கள் வலியுறுத்தல்
/
கான்கிரீட் கால்வாய் அமைக்க வையாவூர் மக்கள் வலியுறுத்தல்
கான்கிரீட் கால்வாய் அமைக்க வையாவூர் மக்கள் வலியுறுத்தல்
கான்கிரீட் கால்வாய் அமைக்க வையாவூர் மக்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 05, 2025 12:15 AM

வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சி, தர்மநாயக்கன்பட்டரை பிரதான சாலையோரம், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக, அசோக் நகர் பிரிவு, மின்வாரிய அலுவலகம் அருகே, மழைநீர் முழுமையாக வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.
இதனால், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மண்கால்வாயை துார்வாரி சீரமைப்பதோடு, கான்கிரீட் கால்வாயாக அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.