/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வலு தூக்கும் போட்டி: 200 பேர் பங்கேற்பு.
/
வலு தூக்கும் போட்டி: 200 பேர் பங்கேற்பு.
ADDED : ஜன 29, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை, திருவொற்றியூரில் நேற்று நடந்த, இருபாலருக்குமான மாவட்ட வலு துாக்கும் போட்டியில், 200 பேர் பங்கேற்றனர்.
சென்னை மாவட்ட வலு துாக்கும் சங்கம் மற்றும் சேலஞ்ச் ஜிம் இணைந்து, மாவட்ட அளவிலான வலு துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை நேற்று துவக்கின.
திருவொற்றியூரில் நடந்த இப்போட்டியில் 'ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட்' ஆகிய, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
வயதின் அடிப்படையில் 'சப் ஜூனியர், ஜூனியர், சீனியர்' ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும், 'ஸ்ட்ராங் உமன்' மற்றும் 'ஸ்ட்ராங் மென்' ஆகிய பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.