/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில் மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி
/
வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில் மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி
வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில் மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி
வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில் மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 27, 2024 12:34 AM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, வண்டலுார் - வாலாஜாபாத் சாலை உள்ளது.
இந்த சாலை வழியே, தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் அதன் சுற்றுப்புறங்களில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பெருட்களை கொண்டுவரும் லாரிகள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.
இந்த சாலையில் பராமரிப்பின்றி உள்ளது. சாலையின் இருபுறமும் மண் குவியலாக உள்ளது. மேலும், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலில் சிக்கி, நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூராக உள்ள மண் குவியல்களை அகற்றி, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.