/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பின்றி வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை
/
பராமரிப்பின்றி வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை
ADDED : நவ 25, 2024 01:29 AM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலை, வண்டலுார் முதல், வாலாஜாபாத் வரை 33 கி.மீ., நான்குவழிச் சாலை உள்ளது. ஓரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டார தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலை குறைக்க, தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், வண்டலுார் -- வாலாஜாபாத் நான்குவழியில் இருந்து, ஆறு வழியாக விரிவுபடுத்தும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடந்தன.
முதற்கட்டமாக, வண்டலுாரில் இருந்து, ஒரகடம் வரை, 17 கி.மீ., சாலை, 150 கோடி ரூபாய் மதிப்பிலும், இரண்டாம் கட்டமாக ஒரகடத்தில் இருந்து, வாலாஜாபாத் வரையில், 16 கி.மீ., சாலை, 180 கோடி ரூபாய் செலவிலும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த சாலை வழியே, தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலை பராமரிப்பு பணி படுமோசமாக உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், சாலை ஆங்காங்கே சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்த சாலையில் நாள்தோறும் விபத்து ஏற்படுகிறது.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், சேதமான சாலையை சீரமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.