/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதராஜர் வனபோஜனம் உற்சவம் களக்காட்டூரில் நாளை வீதியுலா
/
வரதராஜர் வனபோஜனம் உற்சவம் களக்காட்டூரில் நாளை வீதியுலா
வரதராஜர் வனபோஜனம் உற்சவம் களக்காட்டூரில் நாளை வீதியுலா
வரதராஜர் வனபோஜனம் உற்சவம் களக்காட்டூரில் நாளை வீதியுலா
ADDED : ஜன 28, 2025 07:42 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள களக்காட்டூரில் எழுந்தருளும் வனபோஜன உற்சவம், ஆண்டுதோறும் தை மாதத்தில் நடந்து வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான வனபோஜன உற்சவம் நாளை நடக்கிறது. உற்சவத்தையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள், நாளை அதிகாலை 4:30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, களக்காட்டூர் கிராமத்தில் மேனாபெட்டியில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.
தொடர்ந்து, களக்காட்டூரில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கிருந்து புறப்பாடாகி பாலாற்றங்கரைக்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடக்கிறது.
மாலை 4:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அண்ணா குடியிருப்பு, சதாவரம் மடம், புண்ணிய கோட்டீஸ்வரர் தெருவில் மண்டகப்படி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க ராஜவீதி தேசிகர் சன்னிதியில் எழுந்தருள்கிறார்.
இரவு 7:30 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் புறப்பாடாகி, திருக்கோவிலுக்கு எழுந்தருள்வார். உற்சவத்திற்கான ஏற்பாட்டை வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

