/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அமித் ஷா உருவபொம்மை எரிப்பில் வி.சி., நிர்வாகி காலில் தீப்பற்றியது
/
அமித் ஷா உருவபொம்மை எரிப்பில் வி.சி., நிர்வாகி காலில் தீப்பற்றியது
அமித் ஷா உருவபொம்மை எரிப்பில் வி.சி., நிர்வாகி காலில் தீப்பற்றியது
அமித் ஷா உருவபொம்மை எரிப்பில் வி.சி., நிர்வாகி காலில் தீப்பற்றியது
ADDED : டிச 20, 2024 01:36 AM

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில், தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரத்தில், வி.சி., சார்பில், தாலுகா அலுவலகம் எதிரே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பின், அமித் ஷாவின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி, வி.சி., கட்சியினர் எரித்தனர்.
அப்போது, வி.சி., நகர செயலர் பாலாஜி என்பவரின் காலில் தீப்பிடித்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இதனால், அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டது.
வாலாஜாபாத்
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், அப்பகுதி தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ், வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதில், அம்பேத்காரை அவமதித்ததற்காக, அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தினர்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அம்பேத்கர் சிலை முன், நேற்று காலை தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அம்பேத்கர் உருவப்படத்தை கையில் ஏந்தியபடி, அமித் ஷா பதவி விலகுமாறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல், சாலவாக்கத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே, தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- நமது நிருபர்கள் குழு --