/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் சிங்கை ரயில்வே கேட்டில் நெரிசல்
/
எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் சிங்கை ரயில்வே கேட்டில் நெரிசல்
எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் சிங்கை ரயில்வே கேட்டில் நெரிசல்
எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் சிங்கை ரயில்வே கேட்டில் நெரிசல்
ADDED : நவ 15, 2024 01:02 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை, சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு ஆட்கள் ஏற்றி செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.
இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில், இருபுறமும் எதிர் திசையில் தனியார் தொழிற்சாலை பேருந்துகள், அரசு பேருந்துகள் வழியை மறித்து கடக்கின்றன.
முதலில் செல்ல வேண்டும் என்கிற முனைப்பில், போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால், எதிர் திசையில் வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டு, இருபுறமும் தினமும் 1 கி.மீ., துாரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நேரங்களில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்களும் நெரிசலில் சிக்குகின்றன.
இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:
ரயில்வே கேட் பகுதியில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், தாங்கள் முதலில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், எதிர் திசையிலும் சென்று நிற்பதால், எதிர் திசையில் இருந்துவரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில், திருத்தேரி வரை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த பகுதியில் வீதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க, ரயில்வே கேட் அருகில் பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.