/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்கள்
/
ஸ்ரீபெரும்புதுாரில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்கள்
ஸ்ரீபெரும்புதுாரில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்கள்
ஸ்ரீபெரும்புதுாரில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்கள்
ADDED : நவ 12, 2024 11:19 PM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் நான்கு சாலை சந்திப்பில் இருந்து, குன்றத்துார் செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளனமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பட்டுநுால்சத்திரம் பகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன.
போக்குவரத்து மிகுதியான இந்த சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார், இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை வைத்தனர்.
ஆனால், இதை பொருட்படுத்தாமல், வட்டார போக்குவரத்து அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருபவர்கள், தங்களின் வாகனங்கனை நோ பார்க்கிங்கில் விதிமீறி நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, நோ பார்க்கிங்கில் விதிமீறி நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.