/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாடவீதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் காஞ்சியில் போக்குவரத்துக்கு இடையூறு

ADDED : ஜன 13, 2025 12:51 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும், சபரிமலை மற்றும் மேல்மருவத்துாருக்கு வந்து செல்லும் பக்தர்கள், இக்கோவிலுக்கும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, கோவில் அருகில் பார்க்கிங் வசதி இல்லை.
மேலும், கிழக்கு, மேற்கு, தெற்கு மாட வீதிகளில், சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. புதர்மண்டி, சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நடைபாதையால், சாலையின் அகலம் குறைந்துள்ளது.
இந்நிலையில், தெற்கு மாட வீதியில், கோவில் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள நடைபாதை ஓரம் நிறுத்தப்படும் ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகனங்களால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தெற்கு மாட வீதியில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.