/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்
/
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 10, 2025 01:05 AM

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரத்தில் இருந்து, வாலாஜாபாத் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தொழிற்சாலை கன்டெய்னர் வாகனங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லவும், சுங்குவார்சத்திரம் வாலாஜாபாத் சாலை வழியே தினமும் ஏராளமான சரக்கு மற்றும் கன்டெய்னர் வாகனங்கள் வந்து செல்கின்றன.
அவ்வாறு வரும் கன்டெய்னர் வாகனங்கள் சுங்குவார்சத்திரம் -- வாலாஜாபாத் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து, வரிசை கட்டி நிறுத்தப்படுகிறது.
இதனால், பிரதான சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது, பின்னால் வரும் மற்ற வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.