/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துணை மேயர் வார்டில் சீரமைக்காத சாலை பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் தவிப்பு

ADDED : ஆக 11, 2025 11:47 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு, பாலாஜி நகரில், துணை மேயர் வார்டில், பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட சாலையை முறையாக சீரமைக்காததால், கார், மினி வேன், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்குவது தொடர்கிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, துணை மேயராக காங்கிரஸை சேர்ந்த குமரகுருநாதன் பதவி வகிக்கிறார். இவர் 22வது வார்டைச் சேர்ந்தவர்.
பாலாஜி நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் பதிக்கப்பட்டுள்ளது பணி முடிந்தும் பள்ளத்தை முறையாக சீரமைக்கவில்லை.
சில தினங்களாக பெய்த மழையில், பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில், மண் உள்வாங்கி உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் கார், மினிவேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, திருக்காலிமேடு பாலாஜி நகரில், பாதாள சாக்கடை பணியால் சேதமான சாலையை, சமன்படுத்தி, முறையாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.