/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுச்சாலை பள்ளத்தில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
/
மாற்றுச்சாலை பள்ளத்தில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
மாற்றுச்சாலை பள்ளத்தில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
மாற்றுச்சாலை பள்ளத்தில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
ADDED : ஜன 27, 2025 01:12 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் படூர் கூட்டுச்சாலையில் இருந்து, நெல்வாய் கூட்டுச்சாலை வரை செல்லும் சாலையை பயன்படுத்தி ஆனம்பாக்கம், சிறுமையிலூர், குண்ணவாக்கம், காட்டாங்குளம் உள்ளிட்ட கிராமத்தினர், உத்திரமேரூர், மதுராந்தகம், புக்கத்துறை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலை சேதமடைந்து இருந்தது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய இருவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் துவங்கியது.
இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஆங்காங்கே உள்ள பாலங்கள் அகற்றப்பட்டு, புதிய பாலங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், புதிய பாலம் கட்டும் இடங்களில் போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க, அதனருகே மாற்றுச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மாற்றுச்சாலை ஜல்லிக் கற்கள் கொட்டி சரியாக அமைக்காததால், அவ்வழியே ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட், இரும்பு தளவாட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மாற்றுச்சாலையில் எளிதாக கடக்க முடியாமல், அங்கு ஏற்படும் பள்ளத்தில் சிக்கி வருகின்றன.
இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நீண்ட நேரம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலை விரிவாக்க பணியின் போது, பாலம் கட்டும் இடங்களில் அமைக்கப்படும் மாற்றுச்சாலையை, தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

