/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை கோவிலுக்கு வேல் யாத்திரை
/
வல்லக்கோட்டை கோவிலுக்கு வேல் யாத்திரை
ADDED : டிச 03, 2025 06:31 AM

ஸ்ரீபெரும்புதுார்: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, அமைந்தகரை பாதயாத்திரை சங்கம் சார்பில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு வேல் பாதயாத்திரை சென்றனர்.
சென்னை, அமைந்தகரையில் உள்ள வல்லக்கோட்டை பாதயாத்திரை சங்கம் சார்பில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு வேலுடன் பாதயாத்திரை செல்கின்றனர்.
இந்தாண்டு பாதயாத்திரை நேற்று முன்தினம் துவங்கியது. அமைந்தகரையில் உள்ள ராஜராஜேஸ்வரி நவசக்தி கன்னியம்மன் கோவிலில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் வழியே நேற்று மாலை வல்லக்கோட்டை கோவிலை அடைந்தனர்.
பின், கோவிலில் பரணி தீபம் ஏற்றி, முருக பெருமானை பக்தர்கள் வழிபட்டனர். கார்த்திகை தீப திருவிழாவான இன்று, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருகார்த்திகை தீப உத்சவம் நடக்கிறது.

