/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் விழுந்த விளம்பர பேனர்களால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையில் விழுந்த விளம்பர பேனர்களால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் விழுந்த விளம்பர பேனர்களால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் விழுந்த விளம்பர பேனர்களால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 03, 2025 06:30 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வை க்கப்பட்ட விளம்பர பேனர்கள் சாலையில் விழுந்தன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான, 'டிட்வா' புயல் வலுவிழுந்த போதிலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.
சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர் மழையினால், சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் தனியார் விளம்பர பேனர்கள் சாலையில் விழுந்தன.
வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில், சாலையின் மையத் தடுப்பில் வைக்கப்பட்ட தி.மு.க., பேனர், சாலையில் சரிந்து விழுந்தது. இதனால், அவ்வழியாக செல்லும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
அதேபோல, வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், காரணித்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்ட, தனியார் வீட்டுமனை விற்பனை குறித்த விளம்பர பேனர் சாலையில் விழுந்தது. எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சாலையோரங்களில் உள்ள விளம்பர பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என, வா கன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

