/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
/
வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 09, 2025 02:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடியில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
கடந்த 6ம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு ஷோம கும்பம் மற்றும் யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று, காலை 6:00 மணிக்கு மங்களஹாரத்தி, குண்டங்கள் ஹோமம் நடந்தது. 10:20 மணிக்கு, யாக சாலையில் இருந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர், கோவில் கோபுர கலசங்கள் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.