/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 26, 2024 04:00 AM

உத்திரமேரூர், : தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம், உத்திரமேரூர் வட்ட கிளை சார்பில், வட்டத் தலைவர் திருவேங்கடம் தலைமையில், உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் ஷபீர், வட்ட செயலர் பெருமாள் முன்னிலை வகித்தனர்.
அப்போது, கிராம உதவியாளர்களுக்கு 'டி'-கிரேடு ஊதியம் வழங்கி, அரசு ஆணை 33ல், திருத்தம் செய்து,வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், வேலை வழங்க வேண்டும்.
தேர்தல் பணியின்போது, ஓட்டுச்சாவடி ஊதியம் வழங்கிட வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.