/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுடுகாடு வசதி இல்லாததால் கிராமவாசிகள் அவதி
/
சுடுகாடு வசதி இல்லாததால் கிராமவாசிகள் அவதி
ADDED : நவ 03, 2024 01:37 AM
சிவபுரம்:மதுரமங்கலம் அடுத்த, சிவபுரம் ஊராட்சியில், சிவபுரம் காலனி துணை கிராமம் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, சாலை, குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகள் உள்ளன.இருப்பினும், சிவபுரம் காலனியைச் சேர்ந்தவர்கள் இறந்தால், உடலை எரிக்கவோ, புதைக்கவோ, சுடுகாடு வசதி இல்லை.
இதனால், கூவம் நதிக்கரை ஓரத்தில், இறந்தவர்களின் உடலை எரிக்க, புதைக்க வேண்டி உள்ளது. எனவே, சிவபுரம் காலனி கிராமத்திற்கு தனி சுடுகாடு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, சிவபுரம் ஊராட்சி உறுப்பினர் மேகலா, காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியதாவது:
கூவம் நதிக்கரையோரம், இறந்தவர்களின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என, பொதுப்பணி துறையினர் தெரிவித்து உள்ளனர். எங்கள் கிராமத்தினருக்கு சொந்தமான இடத்தில் அரசு நிலம் உள்ளது.
அங்கு, சுடுகாடு அமைக்கலாம் என, பேசி வந்தோம். அந்த இடத்தில், ஊராட்சி தலைவர் குளம் அமைத்து வருகிறார். அதை ரத்து செய்து, சுடுகாடு அமைத்து தர சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.