/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயர்மட்ட பாலம் அமைக்க கிராமவாசிகள் எதிர்பார்ப்பு
/
உயர்மட்ட பாலம் அமைக்க கிராமவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 04, 2025 12:51 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் இருந்து, முட்டவாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை நடுவே, முட்டவாக்கம் ஏரி கலங்கல் செல்கிறது.
இந்த கலங்கல் வழியாக தண்ணீர் செல்லும் போது, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, முட்டவாக்கம் கிராமத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, வதியூர், தைப்பாக்கம், ஒழுக்கோல்பட்டு ஆகிய கிராமத்தினர், பாலுச்செட்டிசத்திரம், திருப்புட்குழி ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, முட்டவாக்கம் - திருப்புட்குழி இடையே உயர்மட்ட அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

