/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடத்தில் 10ம் தேதி தொழில் பயிற்சி முகாம்
/
ஒரகடத்தில் 10ம் தேதி தொழில் பயிற்சி முகாம்
ADDED : ஜன 08, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரகடம் : பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுனர் மேளா திட்டத்தின் கீழ், ஓரகடம், அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், நாளை மறுதினம், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, தொழில் பழகுனர் முகாம் நடக்க உள்ளது.
மத்திய, மாநில மற்றும் தனியார் தொழில் கூட்டமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த முகாமில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களும், கல்வியில் இடை நின்றவர்களும், ஐ.டி.ஐ., தொழில் கல்வி பயின்றவர்களும் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்கள் அறிய, 044 29894560 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.