/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுமயிலூரில் மின்னழுத்த பிரச்னை
/
சிறுமயிலூரில் மின்னழுத்த பிரச்னை
ADDED : நவ 27, 2024 08:57 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமயிலூர் கிராமத்தில், புது காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில், 72 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு திருமுக்கூடல் மின் பகிர்மானம் வாயிலாக மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களாக இப்பகுதியில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுகிறது. இதனால், அப்பகுதியில் இரவு நேரங்களில் டியூப்லைட் ஒளிராமலும், எல்.இ.டி., டி.வி.,கள் இயங்காமலும், மின்விசிறிகள் வேகமற்று சுழலுதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன.
மேலும், மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாவதாகவும் அப்பகுதியினர் புலம்புகின்றனர்.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக சிறுமயிலூரில் புதிய மின்மாற்றி அமைக்க, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.