sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்... வெளியீடு 2022ல் தோற்ற, 'சீட்' கிடைக்காதோர் போட்டியிட ஆர்வம்

/

உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்... வெளியீடு 2022ல் தோற்ற, 'சீட்' கிடைக்காதோர் போட்டியிட ஆர்வம்

உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்... வெளியீடு 2022ல் தோற்ற, 'சீட்' கிடைக்காதோர் போட்டியிட ஆர்வம்

உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்... வெளியீடு 2022ல் தோற்ற, 'சீட்' கிடைக்காதோர் போட்டியிட ஆர்வம்


ADDED : மே 05, 2025 10:52 PM

Google News

ADDED : மே 05, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த முறை தோற்ற, 'சீட்' கிடைக்காத பலரும் இம்முறை போட்டியிட தயாராகி வருகின்றனர்.

தமிழகம் முழுதும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை, அனைத்து மாவட்டத்திலும் தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு மாவட்ட கவுன்சிலர், ஒரு மாநகராட்சி கவுன்சிலர், மூன்று ஊராட்சி தலைவர்கள் என, 32 உள்ளாட்சி பிரதிநிதிகள் காலி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக, வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யும் பணிகள் நடந்தன. இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில், 162 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைய இருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கடந்த வாரம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும், கட்சி பிரதிநிதிகளுக்கு ஓட்டுச்சாவடி விபரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டில், நான்கு ஓட்டுச்சாவடிகளும், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் ஒரு ஓட்டுச்சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளன.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, காஞ்சிபுரம் ஒன்றியத்தில் - 98; வாலாஜாபாதில் - 18; உத்திரமேரூரில் - ஐந்து; ஸ்ரீபெரும்புதுாரில் - 13; குன்றத்துாரில் - 23 என, மொத்தம் 162 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

ஓட்டுச்சாவடி விபரங்கள் வெளியிட்டதை தொடர்ந்து, உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

பட்டியலின் முதல் பிரதியை, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள 32 பதவியிடங்களுக்கான பகுதியில், 43,244 ஆண் வாக்காளர்களும், 46,067 பெண் வாக்காளர்களும், 15 இதர வாக்காளர்கள் என, மொத்தம் 89,326 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விபரங்கள் வருவாய் துறையினரிடமிருந்து பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

எனவே, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள மனு அளிக்கலாம்.

தேர்தல் நெருங்குவதால், கடந்த முறை தோற்ற அல்லது சீட் கிடைக்காத நபர்கள், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சிக்கின்றனர்.

கட்சி சின்னத்துடன், போட்டியிடும் பதவிகளை பெற, மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., ஆகியோரின் ஆதரவு தேவை என்பதால், இப்போதே பலரும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தங்களுக்கான சீட் பெற ஆதரவு தேடுகின்றனர்.

கட்சி சின்னம் சாராமல் போட்டியிடும் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு, நேரடியாக கிராமத்தில் பலரும் இம்முறை போட்டியிட உள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம் வாரியாக இடைத்தேர்தலில் பங்கேற்கும் வாக்காளர்கள் விபரம்

உள்ளாட்சி அமைப்பு காலியிடம் ஆண் பெண் இதர மொத்தம்காஞ்சிபுரம் மாநகராட்சி 1 2,324 2,510 -0 -4,834ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி 1 464 533 0 997காஞ்சிபுரம் ஒன்றியம் 4 24,287 25,898 1 50,196குன்றத்துார் ஒன்றியம் 6 8,544 8,753 1- 17,298ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் 7 3,296 3,705 -1 -7002உத்திரமேரூர் ஒன்றியம் 5 515 502 0 1,017வாலாஜாபாத் ஒன்றியம் 8 3,814 4,.166 -2 -7,982மொத்தம் 32 43,244 46,067 15 89,326








      Dinamalar
      Follow us