/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் விழிப்புணர்வு கோல போட்டி
/
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் விழிப்புணர்வு கோல போட்டி
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் விழிப்புணர்வு கோல போட்டி
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் விழிப்புணர்வு கோல போட்டி
ADDED : நவ 11, 2025 11:25 PM

காஞ்சிபுரம்: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் பற்றி விழிப்புணர்வு கோல போட்டி, கலெக்டர் வளாகத்தில் நேற்று நடந்தது.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,401 ஓட்டுச்சாவடிகளுக்கு, வாக்காளர்கள் திருத்த முகாம், நவ.,4ல் துவங்கி, டிச.,4 வரை நடைபெறுகிறது.
இதற்கான கணக்கெடுப்பு பணிகளை, 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், மகளிர் திட்டம் சார்பில் நடந்த விழிப்புணர்வு கோலப்போட்டியை, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், மகளிர் திட்ட இயக்குநர் பிச்சாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கேற்றனர்.