/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் இட நெருக்கடி
/
வாலாஜாபாத் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் இட நெருக்கடி
வாலாஜாபாத் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் இட நெருக்கடி
வாலாஜாபாத் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் இட நெருக்கடி
ADDED : அக் 25, 2025 11:29 PM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
அப்பகுதியில் பரா மரிப்பு இல்லாமல் மரம், செடி வளர்ந்துள்ள காலி இடத்தை சீரமைத்து, வாகனங்களை நிறுத்துமிடமாக்க வேண்டு மென வாலாஜாபாத் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாதில் பேருந்து நிலையம் அருகே சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கு கிறது.
வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சொத்து வாங்குதல் மற்றும் விற்பனைக்கான பதிவுகள் மேற்கொள்ள, தினசரி இந்த அலுவலகம் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகம் எதிரே அரசு கருவூலம் இயங்குகிறது. கருவூலத் திற்கும் தினசரி ஏராள மானோர் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்வோர், தங்கள் வாகனங்களை அலுவலக வளாகத்தில் நிறுத்த, போதுமான இடவசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், சிலர் அலுவலகம் எதிரே சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால், வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுகுறித்து, வாலாஜாபாத் பகுதி மக்கள் கூறியதாவது:
வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகம் நுழைவாயிலில் காலியாக உள்ள இடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அந்த நிலத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து பயன்பாடின்றி உள்ளது.
மேலும், காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் அந்த காலி இடத்தை ஆக்கிரமித்துள்ளன. எனவே, வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகத்தை சூழந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்றி, இடநெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

