/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டிச., இறுதிக்குள் பணிகள் முடிக்கணும் ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு உத்தரவு

ADDED : அக் 25, 2025 11:27 PM
காஞ்சிபுரம்: திட்டப் பணிகளை டிசம்பர் மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் உத்தரவிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டத்தில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம்; நமக்கு நாமே திட்டம்; சட்டசபை தொகுதி மேம்பாடு நிதி; லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒப்பந்த காலத்தை காட்டிலும், கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்ட பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.