/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
/
சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
ADDED : டிச 14, 2024 01:34 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் உள்ள குளக்கரை பகுதியில் சின்னக்குழந்தை, 69. என்ற மூதாட்டி வசித்து வந்தார்.
சிமென்ட் ஷீட் போட்ட வீட்டில், தனியாக வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.
கனமழை காரணமாக நள்ளிரவு 12:00 மணியளவில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. துாங்கி கொண்டிருந்த மூதாட்டி மீது, சுவர் விழுந்ததால், படுகாயமடைந்தார். அருகில் வசிப்பவர்கள் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரிந்தது.
வருவாய்துறையினர், பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

