/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அறநிலையத்துறை கோவில்களில் எச்சரிக்கை பதாகை
/
அறநிலையத்துறை கோவில்களில் எச்சரிக்கை பதாகை
ADDED : மார் 02, 2024 11:09 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், கம்மாளர் தெரு என அழைக்கப்படும் ஜவஹர்லால் தெருவில், பச்சை வண்ணர் பெருமாள் மற்றும் காலண்டர் தெருவில், பிரவள வண்ணர் என அழைக்கப்படும் பவள வண்ணர் கோவில்கள் உள்ளன.
இந்த இரு கோவில்களுக்கும், பரம்பரை அறங்காவலராக பாலாஜி என்பவரின் மனைவி ஆதிலட்சுமி பதவி வகித்து வந்தார்.
பல ஆண்டுகளாக, இக்கோவில்களூக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. தவிர, நிர்வாக குளறுபடி, கோவில் குளம் பராமரிப்பு இன்றி அலங்கோலமாக காணப்பட்டது.
இதனால், அதிருப்தியடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தின் மீது, ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் வான்மதி, இரு கோவில்களையும் சமீபத்தில் ஆய்வு நடத்தினார்.
கோவிலை முறையாக பராமரிக்காத பரம்பரை அறங்காவலரை, பிப்., 20ம் தேதி தகுதி நீக்கம் செய்தார்.
நேற்று முன்தினம், ஹிந்து சமய அறநிலைய துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதிதாசன் தலைமையிலான அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு சென்றனர்.
அறங்காவலரிடம் இருந்து, இரு கோவில்களின் சாவிகளை வாங்கி, காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலரான தியாகராஜனிடம் ஒப்படைத்தனர்.
நேற்று, இரு கோவில்களின் முகப்பு பகுதியில், இக்கோவில் தொடர்பான விபரங்களுக்கு கோவில் தக்காரை தொடர்பு கொள்ளலாம். வேறு எந்த ஒரு நபரையும் தொடர்பு கொள்ளக்கூடாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது என, கோவில் தக்கார் தியாகராஜன் தெரிவித்தார்.

