sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எச்சரிக்கை... 5 மாதங்களில் 4.8 அடி சரிந்தது நிலத்தடி நீர்: குடிநீர் பிரச்னை, விவசாயம் பாதிக்கும் அபாயம்

/

எச்சரிக்கை... 5 மாதங்களில் 4.8 அடி சரிந்தது நிலத்தடி நீர்: குடிநீர் பிரச்னை, விவசாயம் பாதிக்கும் அபாயம்

எச்சரிக்கை... 5 மாதங்களில் 4.8 அடி சரிந்தது நிலத்தடி நீர்: குடிநீர் பிரச்னை, விவசாயம் பாதிக்கும் அபாயம்

எச்சரிக்கை... 5 மாதங்களில் 4.8 அடி சரிந்தது நிலத்தடி நீர்: குடிநீர் பிரச்னை, விவசாயம் பாதிக்கும் அபாயம்


ADDED : மே 13, 2025 08:44 PM

Google News

ADDED : மே 13, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நிலத்தடி நீர் மட்டம், நான்கு மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பரில், 5.2 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக, 4.8 அடி குறைந்து, ஏப்ரலில் 10 அடியாக பதிவாகி உள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் சரிவதால், குடிநீர் பிரச்னை, விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதமே வெயில் அதிகமாக இருந்ததால், நீர்நிலைகளில் கையிருப்பில் உள்ள தண்ணீர், வேகமாக வற்றி வருகிறது.

மாவட்ட நீர்ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், குளம், குட்டைகள் 2,000 எண்ணிக்கையில் உள்ளன.

இதில் உள்ள தண்ணீரை நம்பியே நெல், கரும்பு உள்ளிட்டவை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆனால், வெயில் காரணமாக 200க்கும் மேற்பட்ட ஏரிகளில், 25 சதவீத தண்ணீர் கூட இல்லாததால், விவசாயிகளும் கவலையில் உள்ளனர்.

நீர்நிலைகள் மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் கிராமப்புறங்களில் ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் சில இடங்களில் குடிநீர் பிரச்னை இருப்பதால், இப்போதும் லாரி வாயிலாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

நீர்வளத்துறை எடுத்த கணக்கெடுப்பில், இந்தாண்டு ஜனவரி மாதம் இருந்த நிலத்தடி நீர்மட்டம், ஏப்ரல் மாதத்திற்குள் கடுமையாக சரிந்துள்ளது. ஸ்ரீபெரும்புதுார் மற்றும் உத்திரமேரூரில் , 2 முதல், 3 அடி வரை சராசரியாக இப்பகுதிகளில் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாடு காரணமாகவும், உத்திரமேரூரில் இயங்கும் குவாரிகளாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நிலத்தடி நீர் திருட்டை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறத்தி உள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பரில் நிலத்தடி நீர்மட்டம், 5.2 அடியாக பதிவாகியுள்ளது. அடுத்து வந்த பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் நிலத்தடி நீர் தொடர்ந்து குறைந்ததால், மார்ச் மாதம் 9 அடியாகவும், ஏப்ரிலில் 10 அடியாக சரிந்துள்ளது.

மத்திய அரசின், 'ஜல்ஜீவன்' திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 185 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கு தேவையான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கிராமப்புற உள்ளாட்சிகள் குடிநீர் தேவைக்கு புதிய ஆழ்துளை கிணறுகளை தோண்டுகிறது.

பாலாற்றில் முறைகேடான ஆழ்துளை கிணறுகள் பல இயங்குகிறது. அவற்றை அகற்றி, அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் முறைகேடான மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

கடந்தாண்டு போதிய மழை பெய்தபோதும், பல ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன. ஏரிகள் பலவற்றில் ஓரளவு தண்ணீர் இருந்தாலும், ஆகஸ்ட், செப்டம்பர் வரை போதிய தண்ணீர் இருக்குமா என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் பெய்ய உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூடுதலாக பெய்தால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கும், நிலத்தடி நீரை நம்பியுள்ள மக்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை வெயில் காரணமாக, நிலத்தடி நீர் நுகர்வு அதிகம் உள்ளது. முறைகேடான குடிநீர் ஆலைகள் பல இயங்குவதாக புகார்கள் உள்ளன.

ராட்சத மோட்டார்கள் கொண்டு, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. தண்ணீர் வியாபாரம் அமோகமாக நடப்பதால், முறைகேடான ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நான்கு மாதங்களில் பதிவான சராசரி நீர்மட்டம் அடியில்


டிசம்பர் - 2024 5.2ஜனவரி - 2025 6.3பிப்ரவரி - 2025 7.6மார்ச் - 2025 9.0ஏப்ரல் - 2025 10.0








      Dinamalar
      Follow us