/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் குழாய் பதிக்கும் பணி கருவேப்பம்பூண்டியில் தீவிரம்
/
குடிநீர் குழாய் பதிக்கும் பணி கருவேப்பம்பூண்டியில் தீவிரம்
குடிநீர் குழாய் பதிக்கும் பணி கருவேப்பம்பூண்டியில் தீவிரம்
குடிநீர் குழாய் பதிக்கும் பணி கருவேப்பம்பூண்டியில் தீவிரம்
ADDED : பிப் 10, 2025 01:07 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தரைமட்ட கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஆகியவற்றின் வாயிலாக, அப்பகுதி வாசிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு, ஏற்கனவே வெங்கச்சேரி செய்யாற்று பகுதியில் இருந்து, ராட்சத குழாய்கள் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2023 --- 24ம் நிதியாண்டில், அம்ரூத் திட்டத்தின் கீழ், 20.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் துவக்கப்பட்டது. தற்போது, அம்ரூத் திட்டத்தில் வெங்கச்சேரி செய்யாற்று பகுதியில் இருந்து மணல்மேடு, கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம் வழியாக, மேலும் புதிதாக குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று கருவேப்பம்பூண்டி பகுதியில் உள்ள காஞ்சிபுரம் நெடுஞ்சாலையோரத்தில், பொக்லைன் இயந்தரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிக்குமார் கூறியதாவது:
அம்ரூத் திட்டத்தின் கீழ், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் பணிக்காக, குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி முடிந்தவுடன், பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய்கள் வாயிலாகே குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.