/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
/
பழையசீவரம் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
பழையசீவரம் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
பழையசீவரம் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : நவ 08, 2025 12:53 AM
வாலாஜாபாத்: பழையசீவரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தனியார் நிறுவனம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விழா மேடை அமைத்து நேற்று பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளிக்கு, ஸ்ரீபெரும்புதுாரில் செயல்படும் சி.எம்.ஆர்., நிறுவனம் சார்பில், 8 லட்சம் ரூபாய் செலவில் கலைவிழா மேடை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணி முடிந்ததையடுத்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பழையசீவரம் ஊராட்சி தலைவர் மகாலட்சுமி மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள் ஸ்ரீராஜன், நாராயணன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.