/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
280 மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் ஆணை
/
280 மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் ஆணை
ADDED : நவ 08, 2025 12:57 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களில், 280 மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் சான்று வழங்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றியக்குழு, ஊராட்சி ஆகிய மூன்று ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் இயங்கி வருகின்றன.
தமிழகம் முழுதும், உள்ளாட்சி நிர்வாகங்களில், தலா ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக நியமிக்கும் அறிவிப்பினை முதல்வர் அறிவித்தார்.
ஜூலை 1ம் தேதி முதல், 31ம் தேதி வரையில் நியமன உறுப்பினர் பதவிக்கும் விண்ணப்பிக்கலாம் என, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஜூன் மாதம் அறிவிப்பினை வெளிட்டனர்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகளுக்கு, தலா, ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினர் என, 274 நபர்கள்; ஐந்து ஒன்றியக் குழுவிற்கு ஐந்து மாற்றுத்திறனாளி உறுப்பினர்; ஒரு மாவட்ட ஊராட்சிக் குழுவிற்கு ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினர் என, மொத்தம் 280 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.
அவர்களுக்கு, நேற்று நியமன சான்றுகளை அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் வழங்கி உள்ளனர்.

