/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஏரியில் தண்ணீர் திறப்பு
/
உத்திரமேரூர் ஏரியில் தண்ணீர் திறப்பு
ADDED : டிச 09, 2024 01:43 AM

உத்திரமேரூர்:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால், திருவண்ணாமலை, சேத்பட், ஜவ்வாதுமலை ஆகிய பகுதிகளில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் கனமழை பெய்தது.
இதனால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனுமந்தண்டலம் தடுப்பணை வரத்து கால்வாயில், தண்ணீர் வந்ததால் உத்திரமேரூர் ஏரி நிரம்பியது.
இந்நிலையில், விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய, உத்திரமேரூர் ஏரியின் நரிமடை திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,- சுந்தர் பங்கேற்று, தண்ணீரை திறந்துவிட்டு மலர் தூவி வரவேற்றார்.
தொடர்ந்து, ஏரியின் பாதுகாப்பு குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்க்கண்டேயன், உதவி பொறியாளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.