/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வரத்து கால்வாய் மீது அனுமதியின்றி பாதை வேடிக்கை பார்க்கும் நீர்வளத்துறை
/
நீர்வரத்து கால்வாய் மீது அனுமதியின்றி பாதை வேடிக்கை பார்க்கும் நீர்வளத்துறை
நீர்வரத்து கால்வாய் மீது அனுமதியின்றி பாதை வேடிக்கை பார்க்கும் நீர்வளத்துறை
நீர்வரத்து கால்வாய் மீது அனுமதியின்றி பாதை வேடிக்கை பார்க்கும் நீர்வளத்துறை
ADDED : ஜூலை 17, 2025 01:27 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் ஏரி நீர்வரத்து கால்வாய் மீது அனுமதியின்றி அமைக்கப்படும் பாதையை அகற்ற, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, டாக்டர்.எம்.ஜி.ஆர்., நகரில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பிரதான சாலையோரத்தில் ஏரி நீர்வரத்து கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயையொட்டி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர், தனக்கு சொந்தமான நிலத்தில் விற்பனைக்காக, வீட்டுமனை பிரிவுகளை தயார் செய்து வருகின்றனர்.
இந்த வீட்டுமனை பிரிவுகளுக்கும் பிரதான சாலைக்கும் இடையே கால்வாய் உள்ளது. இதனால், வீட்டுமனை பிரிவுகளில் இருந்து பிரதான சாலைக்கு வர பாதை இல்லாமல் உள்ளது.
எனவே, அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதையை ஏற்படுத்த, ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அனுமதியின்றி கால்வாயில் ராட்சத குழாய்களை புதைத்து வருகின்றனர்.
இதனால், கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகமான தண்ணீர் செல்லும்போது, ராட்சத குழாய்களின் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்வதற்கு வாய்ப்பு உள்ளது.
கால்வாயை ஆக்கிரமித்து பாதை அமைப்போர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீர்வளத் துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
உத்திரமேரூர் டாக்டர். எம்.ஜி.ஆர்., நகரில் ஏரி நீர்வரத்து கால்வாயில் அனுமதியின்றி ராட்சத குழாய்கள் புதைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கால்வாய் மீது பாதை அமைப்போர் முறையாக நீர்வளத் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். பின், சிறுபாலம் கட்டி பாதை ஏற்படுத்த வேண்டும்.
எனவே, ராட்சத குழாய்களை கொண்டு பாதை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.