/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைப்பு, மோட்டார் பழுதால் உத்திரமேரூரில் குடிநீர் பிரச்னை
/
குழாய் உடைப்பு, மோட்டார் பழுதால் உத்திரமேரூரில் குடிநீர் பிரச்னை
குழாய் உடைப்பு, மோட்டார் பழுதால் உத்திரமேரூரில் குடிநீர் பிரச்னை
குழாய் உடைப்பு, மோட்டார் பழுதால் உத்திரமேரூரில் குடிநீர் பிரச்னை
ADDED : ஏப் 13, 2025 08:24 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 38,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின் விசை குழாய், குடிநீர் கிணறு ஆகியவற்றின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, 15 கி.மீ., தூரத்திற்கு குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன் இந்த குழாய், சோமநாதாபுரம் பகுதியில் உடைந்து குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டது.
இதனால், உத்திரமேரூர் பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள், மூன்று நாட்களாக தவித்து வந்தனர் . இந்நிலையில், குழாய் நேற்று சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய, மோட்டார் இயக்கப்பட்டது.
அப்போது, திடீரென மின் மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனால், தொடர்ந்து உத்திரமேரூர் பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டு வருகிறது.
எனவே, மின்மோட்டார் பழுதை சரி செய்து, விரைந்து குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.