ADDED : மார் 10, 2024 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:தாம்பரம் -- -பல்லாவரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, வாலாஜாபாத் அருகே பாலாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் குழாய் புதைக்கப்பட்டு படப்பை வழியே தாம்பரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், அழுத்தம் காரணமாக படப்பை அருகே இந்த குழாய் நேற்று உடைந்தது. இதனால், பல லட்சம் லிட்டர் பாலாறு நீர் வீணாக வெளியேறி வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

