/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் கால்வாய் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
/
கழிவுநீர் கால்வாய் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
கழிவுநீர் கால்வாய் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
கழிவுநீர் கால்வாய் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : பிப் 14, 2025 12:15 AM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, திருப்புட்குழி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 437 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தை ஒட்டி, ஆர்.ஓ., என, அழைக்கப்படும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது.
அதனருகே, மழைநீர் கால்வாய் வழியாக தண்ணீர் வடிந்து செல்லும் வகையில், கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாயில், சாலையோரம் வீசப்படும் குப்பை கழிவுகளால் மழைநீர், கழிவுநீராக மாறி வருகிறது.
இதனால், சுத்தகரிக்கப்படும் தண்ணீரை பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வீணாகி வருவதோடு, மக்களும் பயன்படுத்த முடியாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், மழை நீர் கால்வாய் மீது சிலாப் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை எளிதாக பிடிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

