sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'சிப்காட் அமைக்க நிலம் தரமாட்டோம்' விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு

/

'சிப்காட் அமைக்க நிலம் தரமாட்டோம்' விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு

'சிப்காட் அமைக்க நிலம் தரமாட்டோம்' விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு

'சிப்காட் அமைக்க நிலம் தரமாட்டோம்' விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு


ADDED : அக் 26, 2024 12:51 AM

Google News

ADDED : அக் 26, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:'உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் பகுதியில்புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலங்களை அளிக்க மாட்டோம்' என, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், விவசாயிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும்கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வேளாண் துறை நேர்முக உதவியாளர் ராஜ்குமார், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், 24.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்டவற்றை, 12 பயனாளிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்த புகார் விபரம்:

l மாவட்டத்தில் வனப்பரப்பு குறைந்து வருகிறது. வனத்துறை சார்பில், அதிக மரங்களை நட வேண்டும். சாலவாக்கம் - -எடையாம்புதுார் இடையேயான வனத்துறை சாலை குறுகியதாக உள்ளது. சாலையும் முறையாக அமைக்கப்படவில்லை. அவற்றை கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்

l கோவிந்தவாடி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை சார்பில் பேருந்து நிறுத்தம் கூட அமைத்து தரப்படவில்லை

l கீழம்பி - செவிலிமேடு இடையே புறவழிச்சாலை அமைத்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை, அவர்களுக்கான உரிய இழப்பீடு கிடைக்காமல் அலைந்து வருகின்றனர்

l உத்திரமேரூர் தாலுகா, காவணிப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில், அறுவடை இயந்திரம், டிராக்டர் ஆகியவற்றை, விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கைஎடுக்கவேண்டும்

l உத்திரமேரூர் அருகே மருதம், திருப்புலிவனம், புத்தளி ஆகியகிராமங்களில், புதிதாகசிப்காட் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

l சிப்காட் அமைக்க எங்களுடைய விவசாய நிலங்களை நாங்கள் வழங்க மாட்டோம்; திட்டத்தை கைவிட வேண்டும்.

l கீழ்கதிர்பூர் கிராமத்தில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சந்தை காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும்

l விவசாய கிடங்குகளில் இருந்து, ஒரு ஆதார் அட்டைக்கு, 20 கிலோ விதை மட்டுமேவழங்குகின்றனர்

அவை எங்களுக்கு போதுமானதாக இல்லை. ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும், 10 கிலோ உயர்த்தி, 30 கிலோவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us