/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
/
153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : ஏப் 09, 2025 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவபுரம்:மதுரமங்கலம் அடுத்த, சிவபுரம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இம்முகாமிற்கு, சிவபுரம் ஊராட்சி தலைவர் பூபாலன் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு துறைகளில் இருந்து, 153 பயனாளிகளுக்கு, 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியக்குழு சேர்மன் கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.