நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பேரனக்காவூர், பட்டா, இடையாம்புதுார், பாலேஸ்வரம் உள்ளிட்ட கிராமங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சோமசுந்தரம் மற்றும் உத்திரமேரூர் முன்னாள் எம்.எல்.ஏ., கணேசன், உத்திரமேரூர் ஒன்றிய செயலர்கள் பிரகாஷ்பாபு, முருகன் ஆகியோர் பங்கேற்று பெண்களுக்கு சேலை, மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.
மக்களுக்கு விரோதமான முறையில் தி.மு.க., ஆட்சி செய்வதாகவும் வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளித்து, தி.மு.க., அரசை தண்டிக்க வேண்டும் என மாவட்ட செயலர் சோமசுந்தரம் பேசினார்.

