/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளையனார்வேலுாரில் ரூ. 1.64 கோடியில் நலதிட்டம்
/
இளையனார்வேலுாரில் ரூ. 1.64 கோடியில் நலதிட்டம்
ADDED : ஜன 08, 2025 09:52 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், இளையனார்வேலுார் ஊராட்சியில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.
முகாமை முன்னிட்டு கடந்த 3ம் தேதி முதல், 7ம் தேதி வரை பொது மக்களிடத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அம்மனுக்களை துறை சார்ந்த அலுவலர்கள் பரிசீலனை செய்து, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், திருத்தம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாதி சான்று, குடும்ப அட்டை, மகளிர் சுய உதவிக்குழு வங்கி கடன், தொழில் கடன் மானியம், வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பில் இடுப்பொருட்கள் மானியம் என, 114 பயனாளிகளுக்கு, 1.64 கோடி ரூபாய் செலவில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டவன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், இளையனார்வேலுார் ஊராட்சி தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

