/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் சேதம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
/
மழைநீர் வடிகால்வாய் சேதம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
மழைநீர் வடிகால்வாய் சேதம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
மழைநீர் வடிகால்வாய் சேதம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
ADDED : ஜன 26, 2025 01:27 AM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் அரசமர தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், பச்சையப்பன் கிளை இடைநிலை பள்ளியை ஒட்டியுள்ள பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், கால்வாயில் மண் மற்றும் குப்பை குவியலால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. மேலும், கனரக வாகனம் சென்றதால், கால்வாயின் மீது அமைக்கப்பட்ட கான்கிரீட் சிலாப் உடைந்து கால்வாயில் விழுந்துள்ளது.
இதனால், மழைநீர் முழுமையாக வெளியேற இயலாத நிலை உள்ளது. மேலும். இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் செல்லும் போது நிலைதடுமாறி கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அரசமர தெருவில், மழைநீர் கால்வாயை துார்வாரவும், சேதமடைந்த சிமென்ட் தளத்தை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன -ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.