/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துார்ந்த கால்வாய் சீரமைப்பது எப்போது?
/
துார்ந்த கால்வாய் சீரமைப்பது எப்போது?
ADDED : டிச 31, 2024 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டு, வேளிங்கபட்டரை பாரதியார் தெருவில், மழைநீர் மற்றும் வீட்டு கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலை யோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மண் திட்டுகளால் அடைப்புஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கி யுள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது.
மேலும், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில்வழிந்தோடுகிறது. எனவே, கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதியார் தெருவினர் வலியுறுத்தி உள்ளனர்.