/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் மீண்டும் புதிதாக அமைப்பது எப்போது?
/
இடிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் மீண்டும் புதிதாக அமைப்பது எப்போது?
இடிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் மீண்டும் புதிதாக அமைப்பது எப்போது?
இடிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் மீண்டும் புதிதாக அமைப்பது எப்போது?
ADDED : ஜன 16, 2025 01:01 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி ஊராட்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ், இரு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, அப்பகுதியைச்சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இரு அங்கன்வாடி மைய கட்டடங்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், பாழடைந்து காணப்பட்டன.
இதனால், சிமென்ட் கூரையில் அடிக்கடி சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மழை நேரங்களில் மழைநீர் ஒழுகியது.
எனவே, எந்த நேரத்திலும் அங்கன்வாடி மைய கட்டடங்கள் இடிந்து விழும் என்பதால், இரு ஆண்டுகளுக்கு முன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதற்கு பதிலாக, ஊராட்சி சேவை மைய கட்டடம், நுாலகம் ஆகிய வற்றில், அந்த அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், அங்கன்வாடி மைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை புதிய கட்டடங்கள் கட்டப்படவில்லை.
இதுகுறித்து, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
எனவே, இடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்களுக்கு பதிலாக,புதிய கட்டடங்கள் கட்ட, மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

