/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாயமாகி வரும் சுடுகாடு சீரமைப்பது எப்போது?
/
மாயமாகி வரும் சுடுகாடு சீரமைப்பது எப்போது?
ADDED : பிப் 13, 2025 12:50 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் அம்மையப்பநல்லூர் ஊராட்சியில், இருளர் காலனி, திடீர் நகர், ஐயப்ப நகர், அம்மையப்பநல்லூர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள திடீர் நகர் சுடுகாடு, தற்போது பராமரிப்பு இல்லாமல், கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு சென்று புதைக்கவும், எரிக்கவும் முடியாத நிலை உள்ளது.
மேலும், இங்கு கை பம்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி காணப்படுகிறது. முட்செடிகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கருவேல மரங்கள் வளர்ந்துள்ள சுடுகாட்டை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

