/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசியல் செல்வாக்கால் அழியும் ஏரி சாட்டையை சுழற்றுவது எப்போது ஆபீசர்ஸ்?
/
அரசியல் செல்வாக்கால் அழியும் ஏரி சாட்டையை சுழற்றுவது எப்போது ஆபீசர்ஸ்?
அரசியல் செல்வாக்கால் அழியும் ஏரி சாட்டையை சுழற்றுவது எப்போது ஆபீசர்ஸ்?
அரசியல் செல்வாக்கால் அழியும் ஏரி சாட்டையை சுழற்றுவது எப்போது ஆபீசர்ஸ்?
ADDED : ஜன 01, 2025 07:31 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது வள்ளுவப்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், 130 ஏக்கர் நிலப்பரப்பில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி மழைக்காலத்தில் முழுவதுமாக நிரம்பினால், 250 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும்.
இந்த ஏரி பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால், நீர்ப்பிடிப்பு பகுதி துார்ந்து, மழைக்காலங்களில் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேகரமாகாத நிலை இருந்து வருகிறது.
இந்த ஏரியின் ஒரு பகுதியை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, மனை பிரிவுகளாக்கி விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏரியின் பரப்பு குறைந்து, முறைகேடு நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
வள்ளுவப்பாக்கத்தில், சர்வே எண்: 45ல், 134 ஏக்கர் பரப்பிலான ஏரி இருப்பது ஆர்.எஸ்.ஆர்., பதிவேட்டில் உள்ளது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க சிலர், ஏரியின் ஒரு பகுதியை முறைகேடாக பட்டா பெற்று, வீட்டு மனைகளாக விற்பனை செய்துள்ளனர்.
எனவே, வள்ளுவப்பாக்கம் ஏரியின் ஒட்டுமொத்த நிலப்பரப்பை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.