sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கரியன்கேட், வாலாஜாபாத் உயர்மட்ட பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடரும் இழுபறி நெடுஞ்சாலை துறை துாக்கம் கலைவது எப்போது?

/

கரியன்கேட், வாலாஜாபாத் உயர்மட்ட பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடரும் இழுபறி நெடுஞ்சாலை துறை துாக்கம் கலைவது எப்போது?

கரியன்கேட், வாலாஜாபாத் உயர்மட்ட பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடரும் இழுபறி நெடுஞ்சாலை துறை துாக்கம் கலைவது எப்போது?

கரியன்கேட், வாலாஜாபாத் உயர்மட்ட பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடரும் இழுபறி நெடுஞ்சாலை துறை துாக்கம் கலைவது எப்போது?


ADDED : ஜன 22, 2025 07:15 PM

Google News

ADDED : ஜன 22, 2025 07:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்காக, உயர்மட்ட பாலம், தரைப்பாலம், சிறுபாலம் போன்ற கட்டுமானங்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய தேவை பல ஆண்டுகளாகவே உள்ளது. இதில், குறிப்பிடும்படியாக, காஞ்சிபுரம் கரியன்கேட் ரயில்வே பாலம் மற்றும் வாலாஜாபாத்-அவலுார் இடையேயான பாலாற்று பாலம் ஆகிய இரு இடங்களிலும் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டிய தேவை பல ஆண்டுகளாகவே நீடிக்கிறது.

கடந்த 2021 ல் பெய்த பெருமழை காரணமாக, வாலாஜாபாத் - அவலுார் இடையேயான பாலாறு பாலம் உடைந்து, சுக்குநுாறாக சிதைந்தது. தரைப்பாலத்தை தற்காலிகமாக, 2.6 கோடி ரூபாயில் சீரமைத்து தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், நிரந்தர தீர்வாக, உயர்மட்ட பாலம் கட்டியே ஆக வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல், பாலாறு உயர்மட்ட பாலம், 100 கோடி ரூபாயில் கட்ட, அரசுக்கு நெடுஞ்சாலை துறை கருத்துரு அனுப்பியுள்ளது.

அதேசமயம், உத்திரமேரூர் தி.மு.க., எம்எல்ஏ., சுந்தர், 'உயர்மட்ட பாலத்தை கட்டுவதை காட்டிலும், தற்போது இருக்க கூடிய தரைப்பாலத்தை உயர்த்தி கட்டினாலேயே போதும்' என அவரது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் உயர்மட்ட பாலம் கட்டினால், பெருவெள்ளம் ஏற்பட்டாலும், போக்குவரத்துக்கு தடை ஏற்படாது என, கிராம மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை, பாலாறு பாலத்துக்கு நிதி ஏதும் ஒதுக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் -- திருத்தணி சாலையில், வெள்ளைகேட் செல்லும் வழியில் உள்ள கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் கட்ட வேண்டிய பணிகள், 5 ஆண்டுகளாக இழுத்தடிப்பதால், வாகன ஓட்டிகள் அன்றாடம் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களுக்கு செல்லவும், அந்த பகுதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வரவும், இந்த சாலையே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வே கடவுப்பாதையில், ஒவ்வொரு நாளும் ரயில் செல்லும் நேரங்களில், நீண்ட நேரம், நெடிய துாரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2018ம் ஆண்டு, கரியன்கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, செப்டம்பர் மாதம் 28ம் தேதி, மேம்பாலம் கட்டுவது தொடர்பாக, ஆய்வு செய்வதற்கான அரசாணை வெளியிட்டது.

மேம்பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கரியன்கேட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட, நேர்கோட்டு வரைபடம் தயார் செய்யப்பட்டு, 2019,ல் ரயில்வே துறையின் அனுமதிக்காக, நெடுஞ்சாலை துறையின் செங்கல்பட்டு கோட்ட அதிகாரிகள் அனுப்பினர்.

அதன்பின், மேம்பாலத்துக்கான வரைபடத்தில் மாற்றம் இருப்பதாக, ரயில்வே துறைக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் கோப்புகள் மாறி, மாறி சென்று வருகிறது. ஆனால், பணிகள் அடுத்தக் கட்டத்திற்கு நகரவே இல்லை. நெடுஞ்சாலை துறை சார்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் கிடப்பிலேயே உள்ளன.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'வாலாஜாபாத்-அவலுார் இடையேயான உயர்மட்ட பாலத்துக்கு நாங்கள் அரசுக்கு கருத்துரு அனுப்பிவிட்டோம். இந்தாண்டு நிதி ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்' என்றார்.






      Dinamalar
      Follow us