/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குழாய் அமைக்கும் பணி எப்போது?
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குழாய் அமைக்கும் பணி எப்போது?
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குழாய் அமைக்கும் பணி எப்போது?
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குழாய் அமைக்கும் பணி எப்போது?
ADDED : டிச 07, 2024 01:10 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் ஒன்றியம் விப்பேடு ஊராட்சி, குண்டுகுளம் கிராமம், மூவேந்தர் நகரில் பழங்குடியினர் திட்டத்தின் கீழ் 2.53 கோடி ரூபாய் செலவில், 58 குடியிருப்புகள் கட்டப்பட்டு, 2023 டிசம்பரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மூன்று இடங்களில் ஆழ்துளை குழாய் மற்றும் மினிடேங்க் அமைத்துகுடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதிவாசிகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாக, வீட்டு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி முடிந்தும்,மேல்நிலைத் தொட்டியில்குழாய் அமைக்கும் பணி துவக்கப்படாமல், ஒன்றரை மாதத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.