/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கராபுரம் சாலை படுமோசம் சீரமைப்பு பணிகள் எப்போது?
/
சங்கராபுரம் சாலை படுமோசம் சீரமைப்பு பணிகள் எப்போது?
சங்கராபுரம் சாலை படுமோசம் சீரமைப்பு பணிகள் எப்போது?
சங்கராபுரம் சாலை படுமோசம் சீரமைப்பு பணிகள் எப்போது?
ADDED : டிச 29, 2024 01:21 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் சங்காராபுரத்தில் இருந்து, புளியம்பாக்கம் செல்லும் 3 கி.மீ., தூரம் கொண்ட இணைப்புச் சாலை உள்ளது. சங்கராபுரம், லிங்காபுரம் ஆகிய கிராமவாசிகள், இந்த சாலையை பயன்படுத்தி புளியம்பாக்கம் வழியாக வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
விவசாய நிலங்கள் வழியாக இந்த சாலை உள்ளதால், மாட்டு வண்டி, டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளுக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில், 1 கி.மீ., தூர சாலை சேதமடைந்துள்ளது. இதனால், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மின் வசதி இல்லாத இச்சாலையில், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சங்கராபுரம்- - புளியம்பாக்கம் இடையிலான பழுதான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.