/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு வசதி எப்போது?
/
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு வசதி எப்போது?
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு வசதி எப்போது?
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு வசதி எப்போது?
ADDED : ஜன 23, 2025 07:28 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் -- வண்டலுார் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, இப்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
வாலாஜாபாத் சுற்றியுள்ள கட்டவாக்கம், சிங்காடிவாக்கம், தேவரியம்பாக்கம் மற்றும் ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள், இரவு, பகலாக இந்த பாலத்தின் வழியாக பயணிக்கின்றனர்.
இப்பகுதி ரயில்வே பாலத்தின் மீது மின்விளக்கு வசதி தற்போது வரை அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மின்விளக்கு வசதி இல்லாததால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, வாலாஜாபாத் ரயில்வே பாலத்தின் மீது மின்விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

